தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Bihar : பஞ்சாயத்து தலைவரின் கணவர் நடுரோட்டில் சுட்டுக் கொலை! அரசியல் போட்டியா?

பீகாரில் பஞ்சாயத்து தலைவரின் கணவர், நடுரோட்டில் ஓடஓட விரட்டி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Bihar
Bihar

By

Published : May 14, 2023, 10:49 PM IST

போஜ்பூர் :பீகாரில் பெண் பஞ்சாயத்து தலைவரின் கணவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாயத்து தலைவரின் கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிய நிலையில், அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போஜ்பூர் மாவட்டம் அர்ரா அருகேயுள்ள ஒரு பஞ்சாயத்து தலைவர் அமராவதி தேவி. இவரது கணவர் மகேந்திர யாதவ். சராயா பஜார் சாலையில், மகேந்திர யாதவை அடையாளம் தெரியாத நபர்கள் இரு சக்கர வாகனத்தில் விரட்டி வந்தனர். பட்டப்பகலில் நடுரோட்டில் மகேந்திர யாதவை உதைத்து சாலையில் தள்ளிய, மர்மநபர்கள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டனர்.

தொடர்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், மகேந்திர யாதவ் மீது இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த மகேந்திர யாதவ் உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர், அந்த மர்ம நபர்கள் மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றனர்.

இந்த சம்பவம் அனைத்தும், அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வேகமாகப் பரவி வருகிறது. மகேந்திர யாதவ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, மகேந்திர யாதவ் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மகேந்திர யாதவ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை விரைந்து கைது செய்வதாகக் கூறினர்.

இதையடுத்து மகேந்திர யாதவின் உறவினர்கள் கலைந்து சென்றனர். என்ன காரணத்திற்காக மகேந்திர யாதவ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, மனைவியுடனான அரசியல் போட்டியில் மகேந்திர யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தலைமறைவான மர்ம நபர்கள் யார் என்றும் அவர்களை பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அதிகாரத்தில் இருக்கும் பெண் பஞ்சாயத்து தலைவரின் கணவர் நடுரோட்டில் அதுவும் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :CISCE Exam Result : ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு - மேற்கு வங்க மாணவி முதலிடம்!

ABOUT THE AUTHOR

...view details