தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியருடன்  திருமணம்..  நாடு கடத்தப்பட்ட பாக். பெண்.. எல்லை கடந்த காதலில் சோகம்.. - ஆன்லைனில் மலர்ந்த காதல்

உத்தரப் பிரதேச மாநில இளைஞரை திருமணம் செய்து, சட்டவிரோதமாக வசித்து வந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம்பெண் நாடு கடத்தப்பட்டார்.

பாகிஸ்தான் பெண் நாடு கடத்தல்
பாகிஸ்தான் பெண் நாடு கடத்தல்

By

Published : Feb 21, 2023, 7:52 PM IST

லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் பெல்லந்தூர் பகுதியை சேர்ந்தவர் முலாயம் சிங். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த ஐக்ரா ஜீவனி என்ற பெண்ணுக்கும் லுடோ ஆன்லைன் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து காதலாக மாறியது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் கராச்சி சென்ற முலாயம் சிங், ஐக்ராவை அழைத்துக் கொண்டு துபாய் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து இருவரும் நேபாளத்தின் காட்மாண்டு நகருக்கு சென்று திருமணம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பீகார் வழியாக இந்தியாவுக்கு வந்த இருவரும், பெங்களூருவுக்கு ஜனவரி 19ஆம் தேதி ரயிலில் வந்தனர்.

பின்னர் இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் பெல்லந்தூரில் குடியேறினர். இந்த நிலையில், சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்த ஐக்ராவை ஜனவரி 23ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு மையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டாரி - வாகா எல்லையில், மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஐக்ராவை பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக வெளிநாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முலாயம், சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: வார்த்தை போர் எதிரொலி: இரு பெண் அதிகாரிகளும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details