தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 9, 2023, 9:53 PM IST

ETV Bharat / bharat

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற நபர் சுட்டுக்கொலை: போதைப் பொருட்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லை வழியாக அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் நபரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

pakistan
பாகிஸ்தான்

பூஞ்ச்:காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில், ராணுவ வீரர்கள் வழக்கம் போல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஷாபூர் செக்டார் பகுதியில் இன்று (ஏப்ரல் 9) அதிகாலை 2.15 மணிக்கு, தீவிரவாதிகள் என சந்தேகப்படும் படியான 3 பேர், இந்திய பகுதிக்குள் வர முயன்றனர். அவர்களை ராணுவ வீரர்கள் எச்சரித்தனர்.

ஆனால் திடீரென அந்த நபர்கள், ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், ஒருவர் உயிரிழந்தார். எஞ்சிய இருவரும் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து காயத்துடன் இருவரையும் மீட்ட பாதுகாப்புத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், "சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் வழக்கம் போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகப்படும் படியாக பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த 3 பேர், கண்காணிப்பை மீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயன்றனர். மேலும் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

வனப்பகுதிக்குள் காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருந்து 3 பைகளில் 17 கிலோ எடை கொண்ட போதை மருந்துகள், பாகிஸ்தான் ரூபாய் நோட்டுக்கள், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணையில் மூவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மைதான் மொகல்லா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: மின் சிக்கனம்: பஞ்சாபில் மே 2 முதல் அரசு அலுவலகங்கள் நேரம் மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details