ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அர்னியா செக்டர் வழியாக ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைவதை வீரர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து அர்னியா போலீசார் தரப்பில், கைது செய்யப்பட்டவர் பாகிஸ்தானின் சியால்கோட்டில் வசிக்கும் முகமது ஷபாத் (45). இவரிடம் ஆயுதங்களோ, வெடிமருத்துகளோ பறிமுதல் செய்யப்படவில்லை. அவரை மீண்டும் பாகிஸ்தானில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.