ராஜஸ்தான்:ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகரன்பூர் பகுதியில் நேற்று (ஜூன் 11) இரவு எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா குட்டி விமானம் ஒன்று பறந்து வந்தது. இருநாட்டு எல்லைப் பகுதியில் அந்த ட்ரோன் பறந்ததை பாதுகாப்புப் படையினர் கவனித்தனர். உடனடியாக அதனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். கீழே விழுந்த அதன் உடைந்த பாகங்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இதையடுத்து ஸ்ரீகரன்பூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீகரன்பூர் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ட்ரோன் ஒன்று பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பிறகு தேடுதல் வேட்டையில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை வீரர்கள் பிடித்து விசாரித்தனர். அதேபோல், அப்பகுதியிலிருந்து இரண்டு ஹெராயின் பாக்கெட்டுகளும் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் ஸ்ரீகரன்பூர் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கு மற்றொரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல்: