இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றம் முதல் முறையாக கலைக்கப்பட்டு, மறுதேர்தல் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஒரு மாதமாக மிகவும் சிக்கலான அரசியல் சூழல் உருவாகி உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு பிரதமர் இம்ரான் கானுக்கு சில கட்சிகள் ஆதரவு அளிப்பதை நிறுத்தின. இதன் தொடர்ச்சியாக இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையிலான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து இம்ரான் கானின் ஆதரவு அமைச்சர்கள் உள்பட 50 பேர் மாயமாகினர். இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில் பாகிஸ்தானின் அதிபர் ஆரிப் அல்வி இந்தத் தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.