தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் பிரதமருக்கு சிறப்பு ஆலோசகராகும் சிறை கைதியின் மனைவி! - பாகிஸ்தான் பிரதமருக்கு சிறப்பு ஆலோசகராகும்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கின் மனைவியை, தற்காலிக பிரதமர் அன்வாருல் ஹக் கக்காரின் சிறப்பு ஆலோசகராக பாகிஸ்தான் அரசு நியமித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2023, 8:40 PM IST

இஸ்லாமாபாத்:டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை மணந்த பாகிஸ்தான் நாட்டவரான முஷால் ஹுசைன் மாலிக்கை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பிரதமர் அன்வாருல் ஹக் கக்கரின் சிறப்பு ஆலோசகர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்காலிக பிரதமர் கக்கரின் மனித உரிமைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான சிறப்பு ஆலோசகராக மாலிக்கை மணந்த பாகிஸ்தான் நாட்டவரான முஷால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரைத் தவிர வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுக்கான SAPM ஆக ஜவாத் சொஹ்ராப் மாலிக், வைஸ் அட்மிரல் கடல்சார் விவகாரங்களுக்கான ஆலோசகராக இப்திகார் ராவ் (ஓய்வு), தொலைக்காட்சி தொகுப்பாளரும் எழுத்தாளருமான வாசிஹ் ஷா, கூட்டாட்சி கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சிக்கான ஆலோசகராக சையதா அரிஃபா ஜெஹ்ரா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Tirupati Temple: சிறுத்தைகளை விரட்ட குச்சிகளை கொடுக்கும் திருப்பதி தேவஸ்தானம்..

ஜம்மு மற்றும் காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF) தலைவர் யாசின், பாகிஸ்தானைச் சேர்ந்த முஷாலை 2009-ல் ராவல்பிண்டியில் மணந்தார். முஷாலும் அவரது மகளும் தற்போது இஸ்லாமாபாத் மாநகரில் வசித்து வருகின்றனர். 1985-ல் பிறந்த முஷால்,லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் பட்டம் பெற்றவர்.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், யாசினுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில், இவர் டெல்லி திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கக் கோரி தேசிய புலனாய்வு முகமை (NIA) டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதையும் படிங்க:‘கச்சத்தீவை தாரைவார்த்த திமுக’ என சொல்வது அடிப்படை அறிவு இல்லாததன் வெளிப்பாடு - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details