பஞ்சாப்:பாகிஸ்தானின் சுதந்திர இனம் இன்று அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் ஓர் அங்கமாக, இந்தியா- பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில், இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.
நீண்ட மரபுகளின் படி பாகிஸ்தான் சுதந்தர தினத்தன்று இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த மரபு இருநாட்டு எல்லையில், அமைதியும், செழிப்பும் தொடர உதவுகிறது" என எல்லைப் பாதுகாப்பு படையின் தளபதி ஜாஸ்பிர் சிங் தெரிவித்துள்ளார்.