தமிழ்நாடு

tamil nadu

ராஜஸ்தான் எல்லையில் போதைப் பொருள் கடத்தலை தொடங்கிய பாகிஸ்தான்!

By

Published : Feb 17, 2021, 10:07 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தலை, பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

drug trafficking
ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தின் எல்லையில் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலின்பேரில், அப்பகுதியில் பார்மர் காவல் துறை, பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடத்தலில் ஈடுபட்ட நபரைக் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 7 கிலோ போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பச்சாவ் கா என்பவரை, ஏழு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சோனல் புரோஹித் அனுமதி வழங்கியுள்ளார். முதற்கட்ட விசாரணையில், இவர் பாகிஸ்தானுக்காகப் பணியாற்றுவது உறுதியானது.

எல்லைப் பகுதியில் கடத்தல் தொழில் ஈடுபட்டிருந்த நபர்களை, பாகிஸ்தான் மீண்டும் துண்டி விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எல்லையில் வசிக்கும் பழைய கடத்தல்காரர்களைக் கண்காணிக்கும் பணியில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளம் மூலம் கடத்தலுக்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்பதையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:காங்கோ நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details