சண்டிகர்: பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் நகரத்தில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தான் ட்ரோன் மீது, 10ஆவது பட்டாலியனைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
வீரர்கள் தாக்கத் தொடங்கியதும், ட்ரோன் ரிவர்ஸ் கியர் போட்டதுபோல மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்கே திரும்பியது. காலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.