இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் காசிம் சூரி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி இருந்தார். இதனால், அங்கு ஆட்சியைக் கலைக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டு இருந்தது. அவரின் இந்த நடவடிக்கையினை சட்டப்பூர்வமானதாக ஏற்றுக்கொள்ள இயலாது என்று பாகிஸ்தான் நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இன்று (ஏப்.7) அறிவித்துள்ளது.
இந்த அமர்வு பாகிஸ்தானில் சட்டமன்ற துணை சபாநாயகர் பிரதமருக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் தற்போது அதற்கு உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத்தை கலைப்பதாக எடுக்கப்பட்ட முடிவு முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளது.
நாட்டின் தன்மை குறித்த தானாக முன்வைக்கப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அரிஃப் ஆல்வியின் முடிவு 'சட்டவிரோதமானது' என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இது தொடர்பான விசாரணைக்கு வருகிற ஏப்.9, சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மீண்டும் கூட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் முடிவடையாமல் அமர்வை ஒத்திவைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
'துணை சபாநாயகர் ஏப்.3 அன்று நம்பிக்கையில்லா தீர்ப்பை வழங்கினார். மார்ச் 28அன்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு விடுப்புவழங்கப்பட்டது. சபாநாயகரின் தீர்ப்பு அரசியலமைப்பிற்கு முரணானது' என்று நீதிபதி பண்டியல் அறிவித்ததாக அங்கு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் பரஸ்பரம் ஆலோசனை நடத்தியதையடுத்து 5-0 என்ற ஏகமனதாக தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகர் சூரியின் நடவடிக்கை தவறானது மற்றும் அரசியலமைப்பின் 95ஆவது பிரிவின் மீறல் என்று தலைமை நீதிபதி பண்டியல் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.