தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியரை திருமணம் செய்து குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பெண்.. காதலுக்கு கிடைத்த பரிசு..! - பாகிஸ்தான்

pakistan woman Indian citizenship: பாகிஸ்தானில் இருந்து கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த மாணவி, தன்னுடன் பள்ளியில் படித்த நண்பரை காதலித்து திருமணம் செய்த நிலையில் தற்போது அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 4:12 PM IST

அகமதாபாத்:பாகிஸ்தானில் இருந்து கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளி மாணவியாக இந்தியா வந்த கோமல், தன்னுடன் பள்ளியில் படித்த நண்பரான குஜராத்தைச் சேர்ந்த ஹிதேஷை கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கோமலுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹிதேஷ் கூறுகையில், கோமலின் தந்தை பாகிஸ்தானின் கராச்சியில் தொழிலதிபராக இருந்தவர். அங்கு அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் மூன்று பெண் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு மிகுந்த கவலையுற்ற கோமலுவின் தந்தை, அவருக்கு அங்கிருந்த சொத்துக்கள் அனைத்தையும் அப்படியே விட்டு விட்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் குடியேறியுள்ளார்.

இதையும் படிங்க:"அவளுக்கு வெரும் 11 ஆயிரம் டாலர் போதும்" இந்திய மாணவி மரணம் குறித்து அமெரிக்கா போலீஸ் கேலி பேச்சு!

அதனை தொடர்ந்து இந்திய பள்ளியில் தனது மூன்று மகள்களையும் சேர்த்து படிக்க வைத்துள்ளார் கோமலுவின் தந்தை. தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு தான் படித்த சர்தார்நகரில் உள்ள பள்ளியில் மூன்று பேரும் படிப்பதற்காக வந்து சேர்ந்தனர். அப்போது நான் அங்கு 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அதனை தொடர்ந்து கோமலும் மற்றும் அவரின் சகோதரிகள் இருவர் என மூன்று பேரும் எனக்கு நண்பர்கள் ஆகினர்.

காலப்போக்கில் கோமலுவுடனான நட்பு காதலாக மலர்ந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். தற்போது எங்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனை தொடர்ந்து 14 வருடங்கள் கழித்து என் மனைவி கோமலுவிற்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. இதை, கடந்த 12ஆம் தேதி அமைச்சர் ஹர்ஷ் சங்வி அவரது கையால் என் மனைவியிடம் வழங்கினார்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்

இதையும் படிங்க:தனிமையில் ஆபாசப்படங்கள் பார்ப்பது குற்றம் அல்ல: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி.!.

நீண்ட நெடிய நாட்கள் காத்திருந்த இந்திய குடியுரிமை கிடைத்ததும் கோமலு மற்றும் அவரது கணவர் ஹிதேஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தற்போது, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு குஜராத் அரசு இந்திய குடியுரிமை வழங்கி வருகிறது. அகமதாபாத்தில் அதிகப்படியான மக்கள் குடியேறியுள்ள நிலையில் இதுவரை ஆயிரத்து 100 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"No Means No" - டெல்லி அரசின் பட்டாசு தடைக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு!

ABOUT THE AUTHOR

...view details