டெல்லி : பாகிஸ்தான் ரஹிம் யார் கான் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டன தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அலி முகம்மது கான் கொண்டுவந்தார். அப்போது அவர்,
“இந்தச் சம்பவத்தால் முஸ்லிம்களாகவும் மனிதர்களாகவும் நாங்கள் வருத்தமடைகிறோம், இந்த சம்பவத்தை யார் செய்திருந்தாலும் அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் மனிதநேயத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இந்த பிரச்சினையில் நாம் அனைவரும் ஒன்று.