சமீபத்தில் நங்கனா சாஹிப்பில் நடைபெற்ற விழாவில் பேசிய உள் துறை அமைச்சர் இஜாஸ் ஷா, "பயங்கரவாத கொள்கைகளைக் கொண்ட அவாமி தேசியக் கட்சியின் தலைவர்களின் வீட்டில் தாலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
எதிர்க்கட்சியினர் மீது தாலிபான் பயங்கரவாதிகளை வைத்து தாக்குதல் நடத்துவேன் - அமைச்சர் ஆவேசம் - எதிர்கட்சியனர் மீது தலிபான் பயங்கரவாதிகளை வைத்து தாக்குதல் நடத்துவேன்
இஸ்லாமாபாத்: எதிர்க்கட்சியினர் மீது தாலிபான் பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்துவேன் என்ற பாகிஸ்தான் உள் துறை அமைச்சரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உள் துறை அமைச்சரின் அறிக்கையிலேயே அவரது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. உலகிற்கு எதிரான வேலைகளில் அவர் ஈடுபட்டுவருகிறார். உடனடியாக, உள் துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது குறித்து பிபிபி கட்சித் தலைவர் பிலாவால் பூட்டோ-சர்தாரியின் செய்தித் தொடர்பாளர் செனட்டர் முஸ்தபா நவாஸ் கோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய செயல் திட்டத்தை (என்ஏபி) மீறுவதாகக் குறிப்பிட்டார், மேலும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் அரசியலில் ஈடுபட்டுள்ள தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்