தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிகரெட்டுக்கு காசு கேட்ட பெட்டிக் கடைக்காரர் சுட்டுக்கொலை! - Bihar shot dead

வாங்கிய சிகரெட்டுக்கு காசு கேட்ட பெட்டிக் கடைக்காரரை, மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை
கொலை

By

Published : Dec 17, 2022, 10:18 PM IST

பெகுசராய்: பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியைச் சேர்ந்தவர் தில்குஷ் குமார். நாகர் பகுதியில் பான் மசாலா கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கும்பலாக வந்த சிலர், தில்குஷ் குமார் கடையில் சிகரெட் வாங்கியுள்ளனர்.

வாங்கிய சிகரெட்டுக்கு காசு தருமாறு தில்குஷ் குமார் கேட்டதாகவும், அதற்கு அந்த கும்பல் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், திடீரென துப்பாக்கியை எடுத்த கும்பலில் ஒருவன் தில்குஷ் குமாரை சுட்டதாக கூறப்படுகிறது.

இதில் சம்பவம் இடத்திலேயே சரிந்து விழுந்து தில்குஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். திடீர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அப்பகுதியில் இருந்த மக்கள் பதறியடித்து ஓடினர். துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், தில்குஷ் குமாரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஷாம்பூவால் நின்ற திருமணம்... காரணம் கேட்டு மிரண்ட மணப்பெண் வீட்டார்...

ABOUT THE AUTHOR

...view details