இழுபறியாய் இருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து நேற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து வெற்றி உரையாற்றிய அவர், அமெரிக்காவில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அநீதிக்கு எதிராக நின்றுள்ளனர். இனி இது அமெரிக்காவை சீர்படுத்தும் நேரம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதேசமயம் இந்தியாவில், கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த நேர்மறையான பரப்புரைகளில் மத்திய அரசும், பாஜகவினரும் ஈடுபட்டுவந்தனர். ஆனால், இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் நாட்டில் கருப்பு பணம் அழிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வந்தனர்.
இதற்கிடையில் பணமதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம், "லாப நோக்கற்ற மற்றும் கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்களில் 16.2 விழுக்காட்டினர் முதலீடு செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர்களில் பலர் வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மீட்கப்பட்ட கருப்பு பணத்தின் மதிப்பு என்ன?. இதுவரை மீட்கப்பட்ட பணத்தின் மதிப்பு என்ன? எங்களுக்கு அதற்கான விடை தெரியும். அது பூஜ்ஜியம்.