தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

OYO நிறுவனரின் தந்தை 20ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு - ஓயோ ரூம்ஸ் லேட்டஸ்ட் செய்திகள்

OYO நிறுவனர் ரிடேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் 20ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

OYO Rooms நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு!
OYO Rooms நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு!

By

Published : Mar 10, 2023, 9:35 PM IST

குருகிராம்:OYO Rooms நிறுவனம், தனிப்பட்ட ஹோட்டல் மேனேஜ்மென்ட் உள்பட பல்வேறு தங்கும் விடுதிகளுடன் கூட்டுறவினை வகித்து முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்த OYO Rooms நிறுவனத்தின் நிறுவனர் ரிடேஷ் அகர்வால் (29) இன்று (மார்ச் 10) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “எனது வழிகாட்டும் ஒளி மற்றும் எங்களது வலிமையான எனது தந்தை ரமேஷ் அகர்வால், இன்று (மார்ச் 10) காலமானார் என்பதை கனத்த இதயத்துடன் எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் எனது சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வாழ்ந்த முழு வாழ்விலும், எனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு ஊக்கத்தை அளித்தார்.

அவரது மரணம் எனது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்து விட்டது. என்னுடைய கடினமான நேரங்களில், எனது தந்தையின் உத்வேகம் மற்றும் முன்னேற்றத்திற்குத் தேவையான வார்த்தைகள், என்னை பல வழிகளில் முன்னேறிச் செல்ல வைத்திருக்கிறது. அவரது ஒவ்வொரு வார்த்தையும் எனது இதயத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த நேரத்தில் எங்களது தனி உரிமைக்கு மரியாதை தருமாறு ஒவ்வொருவரையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, OYO Rooms நிறுவனரின் தந்தை ரமேஷ் அகர்வால் இன்று உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக குருகிராம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜ் கூறுகையில், “இன்று மதியம் 1 மணியளவில் இது தொடர்பான தகவல் எங்களுக்கு கிடைத்தது. ரமேஷ் அகர்வால், 20ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த ரமேஷ் அகர்வாலின் மனைவி, மகன் ரிடேஷ் அகர்வால் மற்றும் ரிடேஷின் மனைவி ஆகியோர் வீட்டில்தான் இருந்துள்ளனர்.

இதுவரை சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக்கான தடயங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. அதேநேரம் இது தொடர்பாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தரப்பில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனவே, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், குற்றப்பிரிவு சட்டம் 174இன் கீழ் வழக்குப்பதிவு செய்யபடும்.

ரமேஷ் அகர்வாலின் உடற்கூராய்வுக்கு பிறகு, அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்” என தெரிவித்தார். இதில் குற்றப்பிரிவு 174 என்பது, இயற்கைக்கு எதிரான மரணம் ஆகும். மேலும் OYO Rooms நிறுவனரான ரிடேஷ் அகர்வாலுக்கும், ஃபார்மேஷன் வென்சர்ஸ் பிரைவட் லிமிடெட் (Formation Ventures Private Limited) நிறுவனத்தின் இயக்குனர் கீதான்ஷா சூட் என்பவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இவ்வாறு தனது மகனுக்கு திருமணமாகிய 2ஆவது நாளிலே தந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:மே.வங்கத்தில் உச்சம் தொட்ட குழந்தைகள் உயிரிழப்பு - 2 மாதங்களில் இவ்வளவா?

ABOUT THE AUTHOR

...view details