கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், டெல்லியில் உள்ள அரசு, தனியார் மருத்துவனைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் கரோனா நோயாளிகளுக்கு வழங்வதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையாக உள்ளது என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இதையடுத்து, டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை வலியுறுத்தியதை அடுத்து, டெல்லி ஜிடிபி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு இந்நிலையில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா டெல்லியில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் அடுத்த 8 நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும் உடனடியாக மத்திய அரசு ஆக்சிஜன் வழங்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் டெல்லியில் நேற்று (ஏப். 20) ஒரேநாளில் 28 ஆயிரத்து 395 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 277 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டில்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் வலியுறுத்தல்