புதுச்சேரி குமரகுருப்பள்ளத்தை சேர்ந்தவர் அசோக். இவர் தனியாக கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாய் ஒன்றை வாங்கி தனது இல்லத்தில் வளர்த்து வருகிறார்.
அந்த செல்ல நாய்க்கு டாம்மி என பெயர் வைத்துள்ள அவர், இரவு நேரங்களை தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் டாம்மிக்கு கால் சட்டை அணிவித்து அழகுபார்த்து வருகிறார். மேலும் அசோக், டாம்மியை வாக்கிங் அழைத்துச் செல்லும்போதும்கூட உடை அணிவித்துக்கொண்டுதான் செல்கிறார்.
உடையணிந்திருக்கும் டாம்மி கரோனா காலம் என்பதால், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துகொண்டு வெளியே செல்ல வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
இந்த உத்தரவையும் டாம்மி கடைப்பிடிக்கும் விதமாக அசோக் அதனை வெளியே கொண்டு செல்கையில், அதற்கும் முகக்கவசம் அணிவித்து அழைத்து செல்கிறார். குழந்தையைபோல் தனது செல்லபிராணியை கவனித்துக்கொள்ளும் அசோக்கின் செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.