மத்தியப் பிரதேச மாநிலத்தில், கோவிட்-19 பாதிப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக, அங்கு உயிரிழந்த உடல்களை எரியூட்டும் மயானங்களில், மரக்கட்டைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் சாகர் பகுதியில் உள்ள உள்ளூர் மயானங்களில் உடல்கள் முறையாக எரியூட்டப்படவில்லை என உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பாதி எரிந்த நிலையில் உள்ள உடல்களை தெருநாய்கள் கடித்து திண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதிபொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாதி எரிந்த நிலையில் கிடக்கும் உடல்களால், அப்பகுதிகளில் துர்நாற்றம் பரவுகிறது எனவும், இந்தச் சூழலில் கோவிட்-19 மேலும் தீவிரமாகப் பரவும் அபாயம் உள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.