தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகாது... பிரதமர் மோடி பெருமிதம்... - PM Modi on win in Gujarat

பாஜகவின் கடின உழைப்பாளிகள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Dec 8, 2022, 6:28 PM IST

டெல்லி:குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வரலாற்று சாதனை படைத்துள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்த மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி இவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும். இதனால் பாஜகவினர் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். முக்கிய தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, "பாஜகவின் கடின உழைப்பாளிகள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

உங்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகாது என்று தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் தனது வாழ்த்து செய்தியில், அற்புதமான தேர்தல் முடிவுகள். குஜராத் மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆசீர்வதித்துள்ளனர். மக்களின் சக்திக்கு தலைவணங்குகிறேன்.

இந்த நேரத்தில், அதிக வேகத்தில் பாஜகவினர் உழைக்க வேண்டும். குஜராத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் சாம்பியன். நமது கட்சியின் உண்மையான பலமாக இருக்கும் உங்களது அதீத உழைப்பு இல்லாமல் இந்த வரலாற்று வெற்றி ஒருபோதும் சாத்தியமாகாது. அதேபோல, இமாச்சலப் பிரதேசத்தில் பாஜவுக்கு வாக்களித்த மக்களின் பாசத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி. மாநில மக்களின் பிரச்சினைகளுக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:குஜராத் சட்டமன்றத் தேர்தல்: ஆம் ஆத்மி கனவை சுக்கு நூறாக்கிய பா.ஜ.க

ABOUT THE AUTHOR

...view details