லக்னோ : உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டவிரோத செயல்கள் மற்றும் மதமாற்றத்துக்கு வெளிநாடுகளிலிருந்து ரூ.27.30 கோடி பணம் கிடைத்துள்ளதாக பயங்கரவாத எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணம் ஏழைகள், ஆதரவற்றவர்கள் மற்றும் நலிவுற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக அறக்கட்டளை என்ற பெயரில் திரட்டப்பட்டாலும் பல்வேறு தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட கலவரக்காரர்களுக்கு ரூ.59.94 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் கைது செய்யப்பட்ட சலாவுதீன் என்ற ஜைனுதீன் ஷேக்கின் அமைப்பான அமெரிக்கன் இந்தியன் ஒரிஜினின் அமெரிக்க கூட்டமைப்பு (AFMI)க்கும் பணம் கிடைத்துள்ளது.