டெல்லி:அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா (PHFI) இணைந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வறிக்கை பிரபல மருத்துவ இதழான லான்செட்டில்( Lancet) வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில், கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனைகளில், இந்திய அரசு உரிய அங்கீகாரத்துடன் வழங்கும் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் 49 விழுக்காடும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் 47.1 விழுக்காடும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகரிக்கப்படாத ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளில், செஃபாலோஸ்போரின்ஸ், மேக்ரோலைட்ஸ், பென்சிலின் ஆகியவை அதிகளவு பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.