தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐஐடிகளில் 4,300 காலியிடங்கள் - மத்திய அரசு தகவல் - ஐஐடிகளில் 4,300 காலியிடங்கள்

நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் ஆசிரியர் பணி காலியிடங்கள் குறித்து மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல் அளித்துள்ளார்.

IITs across India
IITs across India

By

Published : Mar 17, 2022, 8:11 AM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு தற்போது நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் பதிலளித்துள்ளார். அதில் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் உள்ள காலியிடங்கள் குறித்து தகவல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் 4,300க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணிகள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ஐஐடி காரக்பூரில் 815 இடங்களும், அதற்கு அடுத்தபடியாக 532 இடங்களும், ஐஐடி தன்பாத்தில் 447 இடங்களும், ஐஐடி மெட்ராஸ்சில் 396 இடங்களும் காலியாகவுள்ளன.

மேலும், பொருளாதார ரீதியாக 10 விழுக்காடு இட ஒதுக்கீடு ஐஐடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு பொதுப்பிரிவு, எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய பிரிவுகளின் இட ஒதுக்கீடு உரிமை பாதிக்காத வண்ணம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஐஐடி காலியிடங்களை விரைந்து நிரப்ப அரசு போர்கால அடிப்படையில் செயல்படுமாறு ஐஐடி நிர்வாகங்களுக்கு வலியுறுத்தியுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:TODAY HOROSCOPE: மார்ச் 17 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?

ABOUT THE AUTHOR

...view details