இமாச்சலப் பிரதேசம் கின்னௌரில் இன்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் அரசு பேருந்து, சரக்கு வாகனம் சிக்கியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேருந்து கின்னௌரில் இருந்து சிம்லாவுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கிப் புதைந்த பேருந்தையும் சரக்கு வாகனத்தையும் மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, இந்தோ - திபெத் எல்லைக் காவல்படை, உள்ளூர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.