இந்தியாவில் உள்ள பிச்சைகாரர்கள் நிலவரம் குறித்து புள்ளிவிவரங்களை மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவர் சந்த் கெஹ்லாட் வெளியிட்டுள்ளார்.
அதில், “நாட்டில் மொத்தம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 670 பிச்சைகாரர்கள் உள்ளனர். அதில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 673 ஆண்கள் மற்றும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 673 பெண்கள் ஆவார்கள்.
அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 81 ஆயிரத்து 224 பிச்சைகாரர்கள் உள்ளனர். அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 65 ஆயிரத்து 835 பேரும், ஆந்திராவில் 29 ஆயிரத்து 723 பேரும், பிகாரில் 28 ஆயிரத்து 695 பேரும் உள்ளனர்.
குறைந்தபட்சமாக லட்சத்தீவில் 2 பேர் மட்டுமே பிச்சைகாரர்களாக உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பெண்ணின் மூக்கில் குத்திய சோமேட்டோ ஊழியர் கைது!