மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் வேகமாக நடைபெற்றுவருகிறது. விநியோக பணி தொடங்கி இன்றோடு இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 3,29,47,432 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி விநியோகத்தில் ராஜஸ்தான் முதலிடம்! - ஹர்ஸ் வர்தன்
டெல்லி: கரோனா தடுப்பூசி விநியோக பணி வேகமாக நடைபெற்றுவரும் நிலையில், நாட்டிலேயே ராஜஸ்தானில்தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி
மார்ச் 15ஆம் தேதி மட்டும், 30,39,394 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 3 கோடி பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 26,27,099 பேருக்கு முதல் டோஸூம் 4,12,295 பேருக்கு இரண்டாம் டோஸூம் போடப்பட்டுள்ளது. நாட்டிலேயே ராஜஸ்தானில்தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும் மூன்றாவது இடத்தில் மேற்குவங்கமும் உள்ளன.