டெல்லி: இதுகுறித்து மக்களவையில் இன்று (ஆக 5) மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவிக்கையில், இந்தாண்டு மட்டும் 2,45,601 மாணவர்கள் மேல் படிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
உயர்கல்விக்காக 2,45,601 மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர் - இணை அமைச்சர் வி.முரளீதரன்
இந்தியாவை சேர்ந்த 2,45,601 மாணவர்கள் மேல் படிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்தார்.
அதிகபட்சமாக அமெரிக்காவுக்கு 64,667 மாணவர்களும், கனடாவிற்கு 60,258 மாணவர்களும், இங்கிலாந்துக்கு 38,695 மாணவர்களும், ஆஸ்திரேலியாவிற்கு 28,090 மாணவர்களும் சென்றுள்ளனர். குறிப்பாக 2022ஆம் ஆண்டில் 1491 மாணவர்கள் உக்ரைனுக்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் போருக்கு பிறகு நாடு திரும்பியுள்ளனர். இந்த மொத்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு 4,44,553ஆகவும், 2020ஆம் ஆண்டு 2,59,655ஆகவும், 2019ஆம் ஆண்டு 5,86,337ஆகவும் இருந்தது.
இதையும் படிங்க:பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்