நாடு முழுவதும் மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டம், வரும் நாளை (மே 1) முதல் தொடங்கவுள்ளது. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்த நிலையில், நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இந்தத் தடுப்பூசித் திட்டத்திற்கு முன்பதிவு செய்வதற்காகவே பிரத்யேகமாக Co-WIN என்ற டிஜிட்டல் தளம் செயல்பட்டுவருகிறது. இந்தத் தளத்தில் தற்போதுவரை சுமார் 2.45 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று(ஏப்.30) காலை வரை 15.22 கோடி டோஸ் தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 22 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதேவேளை நாளை(மே.1) தொடங்கவுள்ள மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்த பெரும்பாலான மாநிலங்கள் தயக்கம் காட்டிவருகின்றன.
கையிருப்பிலுள்ள தடுப்பூசி டோஸ்கள் உபரியாக இல்லாத காரணத்தால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பாக மாநில அரசுகளிடையே தற்போது குழப்பமான சூழலே உள்ளது.
இதையும் படிங்க:டெல்லியில் கரோனா கோரத்தாண்டவம் ஒரே நாளில் 395 பேர் உயிரிழப்பு