நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 59 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 78ஆக உள்ளது.
இந்தியாவில் குறையும் கரோனா: 12 ஆயிரம் பேர் மட்டுமே பாதிப்பு!
டெல்லி: நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 59 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்து 26 ஆயிரத்து 363ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 26 ஆயிரத்து 363ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 996ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 22 ஆயிரத்து 601ஆக உள்ளது.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 2 லட்சத்துக்கும் குறைவாக இருந்து வருகிறது.இதுவரை மொத்தமாக 20 கோடியே 13 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 6 லட்சத்து 95 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.