மாநிலங்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் குறித்து மத்திய சுகாதராத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை செய்யப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் விநியோகம், மாநிலங்களின் கையிருப்பு குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, "இதுவரை 170 கோடியே 14 லட்சத்துக்கும் டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில், உபயோகம் போக 12 கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன.
மேலும், அடுத்த சில நாள்களில் கூடுதல் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தற்போது 75 விழுக்காடு தடுப்பூசிகளை இலவசமாக விநியோகம் செய்துவருகின்றன.