இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, டெல்லியில் மட்டும் மூன்று நாள்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பால், தகனம் செய்வதற்கு இடமின்றி உள்ளூர் நிர்வாகங்கள் தவித்துவருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் காசிப்பூர் தகன மையம் பார்கிங் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் தகனம்செய்யப்பட்டுள்ளன. அந்தக் காணொலி பார்ப்போரை கரோனாவின் வீரியத்தை மக்களுக்குப் உணரவைக்கிறது.