தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு! - corona virus

புதுச்சேரியில் இன்று(ஏப்.23) இரவு முதல் மதுக்கடைகளை மூடவேண்டும் என கலால் துறை ஆணையர் சுதாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Puducherry
புதுச்சேரி

By

Published : Apr 23, 2021, 1:55 PM IST

புதுச்சேரி: கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக புதுச்சேரியில் இன்று(ஏப்.23) இரவு முதல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி காலை 5 மணி வரை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலால் துறை ஆணையர் சுதாகர் பிறப்பித்துள்ள உத்தரவில், அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த மதுக் கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மதுக்கடைகள், ஹோட்டல்களில் உள்ள பார்கள் இன்று (ஏப் 23) இரவு 10 மணி முதல் வரும் 26ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை மூட வேண்டும்.

மேலும், 26 ஆம் தேதி முதல் வழக்கமான திறப்பு நேரத்தில் அனைத்து மதுக்கடைகளும் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயர் ரக மதுபானங்களை கொள்ளையடிக்க முயற்சி - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details