தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீதான அடக்குமுறைகளைக் கைவிட வேண்டும்! - Delhi chalo

டெல்லி : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மீதான அடக்குமுறைகளைக் கைவிட வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

oppression of the struggling farmers in Delhi must be abandoned
டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீதான அடக்குறைகளைக் கைவிட வேண்டும்!

By

Published : Nov 28, 2020, 9:32 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.

நவ. 26ஆம் தேதியன்று போராட்டம் தொடங்கியபோது, விவசாய போராட்டக் குழுக்களைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் காவல் துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகள் விரட்ட முயன்று அது முடியாமல் போக காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீதான அடக்குமுறைகளைக் கைவிட வேண்டும்!

எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்குக் காவல் துறை அனுமதி அளித்தது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குறைகளைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த கூட்டறிக்கையில், “அறவழியில் போராடிய விவசாயிகளுக்கு எதிராக கடுமையான அடக்குமுறை, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பெரிய தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிப்பு, சாலையில் தடை, காவல் துறையினரின் சாலைத்தடுப்புகள் அமைத்து டெல்லி காவல் துறை நடத்திய அடக்குமுறையானது போரைப் போன்றுள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் வெற்றிகரகமாக டெல்லியை அடைந்துவிட்டார்கள், அவர்களது தைரியத்துக்கும் துணிவுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை

பிற்போக்குத்தனமான விவசாய கொள்கையை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். போராடும் விவசாயிகள் அமைதியாக தங்கள் கோரிக்கையை வைக்க டெல்லி நோக்கி வந்த அவர்களைத் தடுக்க முயன்ற மத்திய அரசின் நடைமுறையைப் பின் வாங்கச்செய்து இன்று ஒரு இடத்தில் போராட அனுமதி பெற்ற வலிமையைப் பாராட்டுகிறோம். அதே நேரம் தற்போது கொடுக்கப்பட்டுள்ள மைதானம் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட இடமில்லாத வகையில் நெருக்கடியான ஒன்று.

ஆகவே, போராடும் விவசாயிகளுக்கு டெல்லி ராம்லீலா மைதானத்தைப் போன்ற பெரிய மைதானம் அல்லது ராம்லீலா மைதானத்தை ஒதுக்கி அவர்கள் அமைதியாக போராட வேண்டிய உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும், குறைந்தபட்ச ஆதார விலை நீக்கிய, இந்திய வேளாண் துறையை, உணவு வழங்குகிற விவசாயிகளை அழிக்கும் புதிய விவசாய கொள்கையை எதிர்க்கிறோம் என்பதை மீண்டும் பதிவுசெய்கிறோம். அதே வேளையில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, சிபிஐ-எம்எல் கட்சியின் பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேபப்ரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு ஆகியோர் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதையும் படிங்க :காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பவன் குமார் பன்சால் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details