தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகளை எதிர்க்கட்சியினர் தவறாக வழிநடத்துகின்றனர் - மத்திய வேளாண்துறை அமைச்சர் - மத்திய வேளாண்துறை அமைச்சர்

டெல்லி: சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை மோடி அரசு நிறைவேற்றியதாகவும் ஆனால் எதிர்க்கட்சியினர் விவசாயிகளை தவறாக வழிநடத்திவருகின்றனர் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய வேளாண்துறை அமைச்சர்
மத்திய வேளாண்துறை அமைச்சர்

By

Published : Dec 16, 2020, 9:24 PM IST

வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் விவசாயிகளை தவறாக வழிநடத்திவருவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

'சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை மோடி அரசுதான் நிறைவேற்றியது'

மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் விவசாயிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், "விவசாயகளின் கொள்முதல் விலையில் 50 விழுக்காடு லாபத்தை கூடுதலாக உயர்த்தி குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரை செய்தது. 2006ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது சுவாமிநாதன் ஆணையம் இந்த பரிந்துரையை முன்வைத்தது.

ஆனால், அந்த அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. மோடி அரசுதான் கொள்முதல் விலையில் கூடுதலாக 50 விழுக்காடு லாபத்தை உயர்த்தி குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details