டெல்லி: அருணாச்சலப் பிரதேசம் தவாங் மாவட்ட எல்லையில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் கடந்த 9-ம் தேதி இந்தியா - சீனா வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் காயமடைந்ததாகவும் பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்து பேசியதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாகரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் சீன எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி வலியுறுத்தி வருகின்றன.