டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று (டிசம்பர் 19) மாநிலங்களவை தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீன எல்லை விவகாரம் குறித்தும், அருணாச்சல பிரசேத மோதல் குறித்தும் விவாதிக்க அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை அவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான ஜக்தீப் தன்கர் நிராகரித்தார். இதனால் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் உள்ள தவாங்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே டிசம்பர் 9ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.