இந்திய அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நாடாளுமன்ற மைய வளாகத்ததில் அரசியலமைப்பு தின விழா நிகழ்வு கொண்டாடப்பட்டது.
இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
இந்த நிகழ்வை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக புறக்கணித்துள்ளன. மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிசெய்யும் விதமாக நிகழ்வை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அவரின் கோரிக்கையை ஏற்கும் விதமாக இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
1949ஆம் ஆண்டு இந்திய அரசியல் சாசனத்தை அரசியல் சாசன அவை அமல்படுத்திய தினம் நவம்பர் 26ஆம் தேதி. இதை ஆண்டுதோறும் அரசியல் சாசன தினமாக அரசு கொண்டாடிவருகிறது.
இதையும் படிங்க:Covid 19 new variant: உலக நாடுகளை மிரட்டும் புதுவகை கரோனா; இந்தியாவிலும் உஷார்நிலை