தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை மோசமாகவே உள்ளது - INDIA கூட்டணி எம்பிக்கள் கூட்டாக அறிவிப்பு! - சோனியா காந்தி

இன மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில், நிலைமை இன்னும் சீரடையவில்லை என்று - INDIA கூட்டணி எம்பிக்கள் கூட்டாக தெரிவித்து உள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை மோசமாகவே உள்ளது - INDIA கூட்டணி எம்பிக்கள் கூட்டாக அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை மோசமாகவே உள்ளது - INDIA கூட்டணி எம்பிக்கள் கூட்டாக அறிவிப்பு!

By

Published : Jul 31, 2023, 12:38 PM IST

டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலைமையை மதிப்பிடுவதற்காக, இரண்டு நாட்கள் பயணமாக, அம்மாநிலத்திற்கு சென்று திரும்பிய இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் (INDIA) எம்.பி.க்கள், டெல்லியில் கூடி விவாதித்தனர்.

அவர்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து, கூட்டணி உறுப்பினர்களுக்கு முன்பாக நில உண்மைகளை எடுத்துரைத்தனர். தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மணிப்பூரில் நிலைமை "கடுமையாக" உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

“ஆளும் கட்சி எம்.பி.க்கள் யாராவது அங்கு சென்று நிலைமையை தாங்களாகவே பார்த்தால், இதுபோன்று, சாதாரணமாக அறிக்கை விடமாட்டார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் (INDIA) 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு மணிப்பூருக்கு வார இறுதியில் சென்று, நிவாரண முகாம்களுக்குச் சென்று வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தது.

மணிப்பூர் வன்முறை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள்,இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் மீது கடும் எதிர்ப்பை காட்ட உள்ளனர் மற்றும் பிரதமரின் அறிக்கை மற்றும் விரிவான விவாதத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட INDIA கூட்டணியின் எம்.பி.க்கள் தலைவர்கள் உடனிருந்தனர்.

21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு டெல்லி திரும்பிய நிலையில், கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட எம்பிக்கள், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

திமுக எம்பி கனிமொழி: மணிப்பூரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்; மணிப்பூர் மாநிலத்தில் இன்னும் அமைதி திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் தாயாருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. நிவாரண. முகாம்களை விட்டு சொந்த வீடுகளுக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எதையும் செய்யவில்லை. மணிப்பூரில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

எம்பி திருமாவளவன் :மணிப்பூரில் மெய்தேய் இனமக்களை சந்தித்தோம். மியான்மர் நாட்டில் இருந்து குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்பது மெய்தேய் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது தொடர்பாக தேவைப்பட்டால் ஜனாதிபதியை நேரில் சந்தித்து நாங்கள் அழுத்தம் கொடுக்க தயாராக உள்ளதாக, அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: நீங்கள் சமூக வலைதளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவரா - வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமா?

ABOUT THE AUTHOR

...view details