நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் காரணமாக பெரும் முடக்கத்தைச் சந்தித்துள்ளது.
இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அரசுக்கு தொடர்பு உள்ளதா என உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கிவருகின்றன. ஆனால் எதிர்க்கட்சியின் கோரிக்கையை அரசு தொடர்ந்து ஏற்க மறுக்கிறது.
இந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கு முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி களமிறங்கியுள்ளார்.
டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்குமாறு 17 எதிர்க்கட்சிகளுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.
ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனை இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று திமுக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம், தேசிய மாநாடு கட்சி, சமாஜ்வாதி கட்சி, ஜே.எம்.எம்., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.
திமுக எம்.பி. கனிமொழி, சிபிஎம் எம்.பி சு. வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, வசந்த குமார் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு உறுப்பினர்களுக்கு காலை உணவு விருந்தளித்த ராகுல் காந்தி, பெகாசஸ் விவகரத்தில் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, அரசுக்கு எதிராக போட்டி நாடாளுமன்றம் நடத்தவது தொடர்பாக திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம் - பிரதமர் மோடி