டெல்லி:திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்களின் இன்று (அக்.31) ஆப்பிள் ஐ-போன்களிலுள்ள தகவல்கள் எடுக்க முயற்சி செய்ததாக எச்சரிக்கை பதிவுகள் வந்துள்ளன என அந்த பதிவின் நகலை தங்களது "X" பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது "X" பக்கத்தில், எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றின் தகவல்களை எடுக்க முயற்சி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் தனக்கு எச்சரிக்கை பதிவுகள் மற்றும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. மேலும், இந்திய உள்துறை அமைச்சகம், அதானி மற்றும் மோடி ஆகியோரை சுட்டிக்காட்டி அந்த எச்சரிக்கை பதிவின் நகலைப் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவை டேக் (Tag) செய்து I.N.D.I.A கூட்டணியிலுள்ள மூன்று தலைவர்கள் இது போன்ற எச்சரிக்கை பதிவு கிடைக்கப் பெற்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி தனது "X" பக்கத்தில், தனக்கு வந்த எச்சரிக்கை பதிவின் நகலைப் பகிர்ந்து "Wonder who? Shame on you. Cc: @HMOIndia for your kind attention" என இந்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு எனத் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது "X" பக்கத்தில், ஆப்பிள் நிறுவனத்திடம் தகவல் சரிபார்த்துள்ளேன். நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எனக்கு மட்டுமல்லாமல் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவுக்கும் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து இதே எச்சரிக்கை பதிவு வந்துள்ளது. இதனை இந்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்குமா? எனத் தெரிவித்துள்ளார்.