2022-23ஆம் ஆண்டுக்கான நாட்டின் நிதிநிலை அறிக்கை இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் நேற்று (ஜன. 31) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், " நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை அடுத்த நாளில், தினசரி செய்தித்தாள்களை படித்தீர்கள் என்றால், நாட்டில் எதிர்க்கட்சிகளே இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் இருந்தாலும் அவற்றுக்கு பொருளாதாரம் குறித்து எந்த பார்வையும் இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.