தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Opposition Coalition Name :எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர்! - இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Opposition meeting
Opposition meeting

By

Published : Jul 18, 2023, 3:36 PM IST

Updated : Jul 18, 2023, 5:26 PM IST

பெங்களூரு :ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இரண்டவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று (ஜூலை. 17) மற்றும் இன்று (ஜூலை. 18) என இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பதிலாக வேறு பெயர் வைப்பது குறித்து எதிர்க்கட்சிகளிடையே ஆலோசனை நடைபெற்றது.

எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சித்தாந்தங்களை பகிர்ந்து கொள்ளும் நிலையில் இந்த கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த கூட்டணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெயர் இருக்க வேண்டும் எனப் பல்வேறு கட்சிகள் விரும்புவதாகத் முதலில் தகவல் கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணி, பீகாரில் உள்ள மகாகட்பந்தன் போன்று தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயர் ஜனநாயகம் அல்லது மக்கள் சார்ந்த தலைப்புகளில் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் 2வது நாள் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. ஏறத்தாழ 25 கட்சிகளை சேர்ந்த 46 தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மகா கூட்டணிக்கு ஏற்த்தாழ 4 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3, தேசிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி என்ற பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இறுதியில் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (இந்தியா) என்ற பெயர் இறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கட்சிகள் மகா கூட்டணிக்கு இந்தியா பெயர் வைக்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி எனபதன் சுருக்கமாக "இந்தியா" என அழைக்கப்படுகிறது.

இந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பரூக் அப்துல்லா ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளார் சீதாராம் யெச்சூரி, உமர் அப்துல்லா, டி ராஜா, மதிமுக தலைவர் வைகோ, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காஷ்மீரின் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க :Brij Bhushan singh: மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்.. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன்!

Last Updated : Jul 18, 2023, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details