டெல்லி: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் ஒன்பது நாள்களாக தாக்குதல் நடத்திவருகின்றன. இந்த போர் நடவடிக்கை காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி ‛ஆபரேஷன் கங்கா' என்னும் பெயரில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக மீட்டுவருகிறது.
ஹங்கேரியிலிருந்து 219 பேருடன் புறப்பட்ட விமானம் டெல்லி வந்தடைந்தது - ஆப்ரேஷன் கங்கா 2022
ஹங்கேரியின் புடாபெஸ்ட் விமான நிலையத்திலிருந்து 219 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று(மார்ச்.4) டெல்லி வந்ததடைந்தது.
அதன்படி நேற்று(மார்ச்.3) ஹங்கேரியின் புடாபெஸ்ட் விமான நிலையத்திலிருந்து 219 இந்தியர்களுடன் புறப்பட்ட இன்டிகோ சிறப்பு விமானம் இன்று(மார்ச்.4) டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்ததடைந்தது. டெல்லி வந்த மாணவர்களை மத்திய இணை அமைச்சர் நிசித் பிரமானிக் வரவேற்று நலம் விசாரித்தார். முன்னதாக மத்திய அரசு, இன்றும் நாளையும் உக்ரைனிலிருந்து 7,400 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் கொண்டுவரப்படுவார்கள் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உக்ரைனில் மற்றொரு இந்திய மாணவர் சுடப்பட்டார்