தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சட்டப்பிரிவு 370 நீக்கம்- ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கிய இருவர்! - நித்யானந்த் ராய்

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு பிறகு இரண்டு பேர் மட்டுமே நிலம் வாங்கியுள்ளனர் என உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார்.

J&K
J&K

By

Published : Aug 10, 2021, 6:53 PM IST

டெல்லி : ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு பிறகு மாநிலத்தில் இருவர் நிலம் வாங்கியுள்ளனர் என மக்களவையில் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார்.

திமுக மக்களவை எம்பி எஸ். ராமலிங்கம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கத்துக்கு பிறகு அங்கு குடியிருப்பு விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி அங்கு இருவர் நிலம் வாங்கியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : 'இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை' - இம்ரான் கான்

ABOUT THE AUTHOR

...view details