கரோனா தடுப்பூசி சில மாநிலங்களில் தட்டுப்பாடு மற்றும் குறைவான அளவு போடப்பட்டுள்ளது போன்ற தொடர் பின்னடைவுகளால் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட ரூ.35,000 கோடி ரூபாய் பட்ஜெட்டை விட குறைவாக பயன்படுத்துகிறது என்பது கடந்த வாரத்தில் தினமும் 3,600க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்களுடன், சராசரியாக தினமும் 3.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் இந்த தருணத்தில், தடுப்பூசி இயக்கத்தில் வேகத்தை நிர்வகிப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும்
மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், தமது அடுத்தடுத்த டிவிட் பதிவில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.1,104.78 கோடியும், இந்திய சீரம் மையத்துக்கு ரூ.3639.67 கோடியும் தரப்பட்டு மொத்தம் ரூ.4755.45 கோடி தடுப்பூசிக்காக மத்திய அரசு செலவிட்டுள்ளதாக கூறி உள்ளார்.
15 கோடி டோஸுக்கும் அதிகமான தடுப்பூசிகளை விநியோகிக்க வேண்டும் என்ற ஆரம்பகட்ட ஆர்டருக்கான ரசீது தொகை ரூ.2353.09 கோடி சீரம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர, மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 11 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து ஆர்டர் விநியோகிப்பதற்காக ரூ.1732.50 கோடி முன்பணமாக சீரம் நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.
அனுராக் தாக்கூர் கூறியுள்ளபடி, சீரம் நிறுவனம் மொத்த மத்திய அரசின் ஆர்டரான 26.60 கோடி டோஸ் தடுப்பூசியில், இதுவரை 14.344 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மட்டுமே கொடுத்துள்ளது.
இதே போல, கோவேக்சின் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மொத்தம் 8 கோடி டோஸ் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு இதுவரை மொத்தம் ரூ. 1104.78 கோடியை வழங்கி உள்ளது. இரண்டாவது கட்டமாக 5 கோடி தடுப்பூசிகளை மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விநியோகிப்பதற்கான முன் தொகையாக ரூ.787.5 கோடியும் சேர்த்தே இந்த தொகை தரப்பட்டுள்ளது.
எனினும், கடந்த நிதி ஆண்டில், இந்த இரண்டு தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கும் எவ்வளவு தொகை தரப்பட்டது என்று அமைச்சர் டிவிட் செய்தியில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இந்த ஆண்டு தடுப்பூசி பட்ஜெட்டான ரூ.35,000 கோடியில் இருந்து தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு தரப்பட்டது என்றும் சொல்லப்படவில்லை.
உள்ளூர் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு ஆர்டர் கொடுப்பதில் மத்திய அரசு தாமதம் செய்வதால் தடுப்பூசி திட்டத்தின் வேகம் குறைந்து அதன் காரணமாக நாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், மரணங்களும் எதிர்பாராத விதமாக அதிகரித்திருப்பதாக சர்ச்சைகள் அதிகரித்த நிலையில், மத்திய இணையமைச்சர் இந்த தொடர் பதிவை வெளியிட்டுள்ளார். இதர நாடுகளில் உபயோகிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதில் தாமதம் செய்வதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. முன் கூட்டியே அனுமதி கொடுத்திருந்தால், தடுப்பூசி பயன்பாட்டை அதிகரித்து நாடு முழுவதும் சீராக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கலாம் என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.
மார்ச் மாத த்துக்குப் பின்னர் நாட்டின் இரண்டு தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு புதிதாக எந்த ஆர்டரும் கொடுக்கப்படவில்லை என்று வெளியான செய்தியை இந்த வாரத்தின் தொடக்கத்தில், மத்திய அரசு மறுத்திருந்தது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்த செய்தி உண்மையில்லை என்றும், தடுப்பூசி வழங்குவதற்கான ஆர்டர் ஏப்ரல் 28ம் தேதி தரப்பட்டது என்றும், 11 கோடி தடுப்பூசி சீரம் நிறுவனத்தில் இருந்தும், 5 கோடி தடுப்பூசி பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்தும் மொத்தம் 16 கோடி தடுப்பூசிகளுக்கு புதிய ஆர்டர் தரப்பட்டது என்றும் கூறியுள்ளது. இந்த இரண்டு நிறுவனத்துக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்ட அதே தேதியில் ரூ. 2520 கோடி முன் தொகையாகத் தரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடியில் இது வெறும் 7.5 சதவிகிதம் மட்டும்தான்.
மொத்த தொகை
இந்த ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கோவிட் தடுப்பூசி திட்டத்துக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கியிருப்பதாக அறிவித்தார்.