மொராக்கோ பாதுகாப்பு படையினர் தனது செல்ஃபோனை வேவு பார்த்தனர் என்ற செய்தி குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பென்னட்டிடம் பேசியதாக கடந்த ஜூலை 22ஆம் தேதி இஸ்ரேல் நாட்டு ஊடகங்கள் கூறின.
இச்சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டரில் ப. சிதம்பரம், "பிரான்ஸ் நாட்டின் அதிபர் உள்பட அந்நாட்டு மக்களின் தொலைபேசிகளை பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி ஹேக் செய்த விவகாரம் குறித்த முழு தகவலை தெரிந்துகொள்வதற்காக இஸ்ரேல் பிரதமரை, மேக்ரான் தொடர்புகொண்டார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தீர்வுகளோடு வருவதாக பென்னட் உறுதியளித்துள்ளார். ஆனால் இச்சம்பவத்தில் அக்கறையே இல்லாத ஒரே அரசு இந்திய அரசுதான்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், ”இந்த வேவு பார்த்தல் விவகாரம் குறித்து இந்திய அரசுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ஒருங்கிணைந்த நாடாளுமன்ற குழு விசாரணைக்கு அரசு அழைப்பு விடுக்க வேண்டும் அல்லது இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நீதிபதியை நியமிக்க வேண்டி உச்ச நீதிமன்றத்திடம் கேட்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:பூலான் தேவி சிலையைத் திறக்கவிடாமல் விமான நிலையத்திலிருந்து பிகார் அமைச்சர் அனுப்பி வைப்பு