மரபணு உருமாறிய, அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதிவரை மத்திய அரசு தடைவிதித்தது.
இந்தியாவில் பரவும் உருமாறிய கரோனா வைரசை கருத்தில்கொண்டு, பிரிட்டன் உடனான விமான சேவை ரத்து ஜனவரி 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஜனவரி 8ஆம் தேதி முதல் மீண்டும் பிரிட்டனுக்கு பயணிகள் விமான சேவை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.