தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை - தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது - 4 பேர் கைது

ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தந்தை, மகன் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், கணினி, மடிக்கணினி, ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

lottery ticket
lottery ticket

By

Published : Apr 16, 2022, 7:32 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை மூகாம்பிகை நகரில் ஆன்லைன் மூலம் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவலர்கள் சோதனை நடத்தியதில், நான்கு பேர் கொண்ட கும்பல் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

உடனே அவர்கள் நான்கு பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் நாவற்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(49), அவரது மகன் ஈஸ்வர் (20), லாஸ்பேட்டையைச் சேர்ந்த மதிவாணன்(34) மற்றும் அரிபிரசாந்த்(27) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து லாட்டரி விற்ற பணம் 24 ஆயிரம் ரூபாய், செல்போன்கள், கணினி, மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: 'ஓராண்டிற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வரலாற்று சாதனை' - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details