தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: 3 ஓஎன்ஜிசி ஊழியர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு! - ஓஎன்ஜிசி ஊழியர்கள் உயிரிழப்பு

ஓஎன்ஜிசி ஊழியர்கள் உள்பட 9 பேர் சென்ற பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 ஓஎன்ஜிசி ஊழியர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து
ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து

By

Published : Jun 28, 2022, 6:30 PM IST

Updated : Jun 28, 2022, 7:20 PM IST

மும்பை:மும்பை கடற்கரையில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு (ஓஎன்ஜிசி) சொந்தமான எண்ணெய் உற்பத்தி நிலைய பகுதிக்கு 2 விமானிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் இன்று (ஜூன் 28) சென்றது.

அரபிக்கடல் வழியாக ஹெலிகாப்டர் சென்றபோது, சாகர் கிரண் பகுதி அருகே ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. எண்ணெய் உற்பத்தி நிலையப் பகுதியிலிருந்து 1.5 கிமீ தொலைவில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்துள்ளது.

இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக ஓஎன்ஜிசி படகுகள், இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரும் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓஎன்ஜிசி வெளியிட்டுள்ள தகவலில், "ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 3 ஓஎன்ஜிசி ஊழியர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மும்பை அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழப்பு 11ஆக அதிகரிப்பு

Last Updated : Jun 28, 2022, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details